சிங்கப்பூர் – மலேசியா இடையேயான விமானம் மற்றும் நிலவழி VTL சேவைகள் தொடக்கம்

pm_lee_hsien_loong_and_pm_ismail_sabri
Photo: Ooi Boon Keong/TODAY

சிங்கப்பூர் – மலேசியா இடையே விமானம் மற்றும் தரை வழியாக VTL பயண ஏற்பாடுகள் இன்று திங்கள்கிழமை (நவம்பர் 29) தொடங்குகின்றன, இதன் மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் எல்லையை கடக்க உள்ளனர்.

சாங்கி விமான நிலையத்திற்கும் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையிலான இந்த தனிமை இல்லா VTL திட்டம் கடந்த நவம்பர் 8 அன்று அறிவிக்கப்பட்டது.

இன்று முதல் இந்தியா, சிங்கப்பூர் இடையேயான ‘VTL’ விமான சேவை!

அதே வேளையில், காஸ்வே வழியாக நில வழி VTL ஏற்பாடு கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கோலாலம்பூரில் இருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் SQ107 விமானத்தில் பயணித்த பயணிகள், சாங்கி விமான நிலைய முனையம் 3இல் வந்து இறங்கினர்.

இன்று தொடங்கப்பட்ட மலேசியாவுடனான புதிய தடுப்பூசி ஏற்பாட்டின் (VTL) கீழ் சிங்கப்பூருக்கு வரும் முதல் விமானம் இதுவாகும். இந்த SQ107 விமானம் இன்று காலை 11.25 மணியளவில் சாங்கி விமான நிலையத்தை வந்தடைந்தது.

மலேசியாவில் இருந்து ஜெட்ஸ்டார் ஆசியா, மலிண்டோ ஏர் மற்றும் ஏர் ஏசியாவில் உள்ள VTL விமானங்கள் முன்னதாகவே சிங்கப்பூர் வந்தடைந்தன.

மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் வரவேற்றார்.

மகனுக்கு விலையுயர்ந்த போன் வாங்கிக்கொடுத்த சிங்கப்பூரில் பணிபுரியும் தந்தை: அதனால் ஏற்பட்ட விபரீதம் – மகன் தற்கொலை