சிங்கப்பூருக்குள் நுழைய வெளிநாட்டு ஊழியர்களுக்கு தடை விதிக்கலாமே? என்ற கேள்விக்கு மனிதவள அமைச்சத்தின் பதில்

வேலை தேடும்போதும், வேலையிடத்திலும் காட்டப்படும் பாகுபாடு - சிங்கப்பூரில் குறைவாக பதிவு
Photo: REUTERS

கடந்த ஆண்டு சர்க்யூட்-பிரேக்கர் அதிரடி திட்டத்திற்கு பிறகு சிங்கப்பூருக்குள் நுழைய வெளிநாட்டு ஊழியர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தால், வர்த்தகம், குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் என்று மனிதவள அமைச்சகம் (MOM) கூறியுள்ளது.

அப்படி செய்திருந்தால், நாட்டில் 30,000-க்கும் குறைவான கட்டுமானத் ஊழியர்கள் மட்டுமே முக்கிய உள்கட்டமைப்பு மற்றும் கட்டிடத் திட்டங்களில் பணியாற்றிருப்பார்கள் என்று அமைச்சகம் இன்றைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் முழு சர்க்யூட் பிரேக்கர் என்னும் அதிரடி திட்டம் மீண்டும் விதிக்கப்படுமா? – அமைச்சர் விளக்கம்

அதே போல, சுகாதாரத் துறை மற்றும் துப்புரவு போன்ற அத்தியாவசிய சேவைகள் உட்பட சேவைத் துறையில் பணியாற்ற 70,000-க்கும் குறைவான வெளிநாட்டு ஊழியர்கள் இருந்திருப்பார்கள்.

மேலும், வீடுகளில் 30,000-க்கும் குறைவான வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்கள் இருந்திருப்பார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, வெளிநாடுகளில் இருந்து வரும் கோவிட் -19 பாதிப்புகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த, சிங்கப்பூரின் எல்லைகளை முழுவதுமாக மூடுமாறு பொதுமக்கள் தெரிவித்த சமீபத்திய கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக MOM இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

மேலும், கடந்த மே 2 முதல், தெற்காசியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டதாகவும் அமைச்சகம் மேற்கோள் காட்டியுள்ளது.

மறுபுறம், மனிதவள பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, அதிகமான ஊழியர்களை சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்பட வேண்டும் என்று வர்த்தகங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

கடந்த ஆண்டில், ஊழியர்கள் பலர் தங்கள் ஒப்பந்தங்களை முடித்துவிட்டு சொந்த நாட்டுக்கு திரும்பியதால், வெளிநாட்டு ஊழியர்கள் சொந்த நாட்டுக்கு திரும்பிய எண்ணிக்கை, சிங்கப்பூருக்கு வந்த எண்ணிக்கையைவிட அதிகம்.

தற்போது இங்குள்ள வெளிநாட்டு ஊழியர்களை தக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், ஊழியர்கள் சொந்த நாட்டுக்கு திரும்ப ஏங்கிக்கொண்டிருக்கலாம் என்பதையும் புரிந்துகொள்வதாகக் அது கூறியுள்ளது.

மலேசியா- சிங்கப்பூர் நாடுகளுக்கு இடையில் கருணை அடிப்படையில் பயணங்கள் தொடக்கம்!