வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவிகளை வழங்க Here With you ஹெல்ப்லைன்..!

Singapore Migrant workers
(Photo: Ministry of ManPower)

சிங்கப்பூரில் கடந்த ஏப்ரல் மாதம் மாதத்தில், சமூக சேவைகள் செய்யும் ஒரு குழு, வெளிநாட்டு ஊழியர்களுக்கு மனோவியல் (Psychological) ஆலோசனைகளை வழங்குவதற்காக Here With You என்ற ஹெல்ப்லைனைத் தொடங்கியுள்ளனர்.

இந்த ஹெல்ப்லைனைத் தொடங்க உதவிய சமூக சேவையாளர்களில் ஒருவரான Edwin Soh கூறுகையில், COVID-19 தொற்றுநோய் வெளிநாட்டு ஊழியர்கள் மீது எவ்வாறு ஆழ்ந்த மனோவியல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்த தனது நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

இதையும் படிங்க : ஆட்குறைப்புக்குப் பதிலாக சம்பளத்தைக் குறைக்கலாம் – சம்பள மன்றம்.!

வெளிநாட்டு ஊழியர்களுக்கு சாதாரணமாகவே மனோவியல் பிரச்சனை இருக்கும், அது இந்த தொற்றுநோயின் போது பன்மடங்காக அதிகரித்துள்ளதாக கூறினார்.

மேலும், COVID-19 காரணமாக நீண்டகாலமாக தனிமைப்படுத்துவது அவர்கள் மீது பலவீனப்படுத்தும் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் இன்றைய நிலவரப்படி, தங்கும் விடுதிகளில் வசிக்கும் 57,000 வெளிநாட்டு ஊழியர்களில் 95 சதவீதம் பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் அதிரடி திட்டம் (Circuit Break) தொடங்கியதிலிருந்து, வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து 1,300க்கும் மேற்பட்ட அழைப்புகள் இந்த ஹெல்ப்லைனுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு ஊழியர்கள் மனோவியல் ஆலோசனைகளை அணுகுவதில் சில தடைகளை எதிர்கொள்கின்றனர், அதாவது மொழி தடைகள் மற்றும் எப்போது உதவி பெற வேண்டும் என்பதை அறிந்து கொள்வதில் கல்வியறிவு இல்லாமை.

இந்த தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்ய கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட அணுகுமுறையை பின்பற்றுவதும் முக்கியம்.

அதிக மனோவியல் தேவைகளைக் கொண்ட ஊழியர்களுக்கு பெங்காலி பேசும் தன்னார்வலர்களை கொண்டு மனோவியல் நிபுணர்களுடன் இணைத்து அவர்களுக்கு போதுமான உதவிகளைச் செய்ததாக தெரிவித்தனர்.

Here With you ஹெல்ப்லைன் பற்றி மேலும் அறிய : https://www.facebook.com/herewithyouhelpline/

இந்த Here With you ஹெல்ப்லைனில் தங்களை தன்னார்வலராக பதிவு செய்ய https://docs.google.com/forms/d/e/1FAIpQLSc_Ny9Hf4w53p4climRDWlQAWQr0-Wzacgic5hw1ybv5w3cJQ/viewform என்ற google Form மூலமாக இணைந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க : உரிய வேலை அனுமதி இல்லாமல் பணிபுரிந்த 12 பேர் கைது..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…