சிங்கப்பூரில் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் அவசியம் – MOH

Pic: Today

சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்று தற்போது அதிகரித்து வரும் காரணத்தால், இரண்டாம் கட்ட விழிப்புநிலையை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம் என சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் உள்ள உணவங்காடி நிலையங்கள் மற்றும் ஜூரோங் மீன் வர்த்தகத் துறைமுகக் குழுமத்துடன் தொடர்புடைய ஈரச் சந்தைகள் ஆகியவற்றில் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டு உள்ளதையடுத்து, இரண்டாம் கட்ட விழிப்புநிலையை நடைமுறைப்படுத்துவது அவசியம் என அமைச்சகம் கூறியுள்ளது.

இந்து கோயில்களில் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள்!

சமூகத்திலும், நாட்டிலும் நிறைய நபர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும்,
தற்போது உள்ள நிலைமை மிகுந்த கவலைக்குரியது என சுகாதார அமைச்சகம் சுட்டிக்காட்டியது.

மேலும், கிருமித்தொற்று பரவலால் சமூகத்தில் பாதிக்கப்படுவோர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் ஜூலை 22 முதல் நடப்புக்கு வரவுள்ள 2ஆம் கட்டம்