சிங்கப்பூரில் இன்று மூன்று பள்ளிவாசல்கள் தற்காலிகமாக மூடல்!

Three mosques closed for cleaning after visits by COVID-19 cases: MUIS (PHOTO: MyTipsnTrips)

COVID-19 தொற்று உறுதிசெய்யப்பட்ட நபர்கள் மூன்று மசூதிகளுக்கு சென்றுவந்ததை அடுத்து, இன்று புதன்கிழமை (டிசம்பர் 2) சுத்தம் செய்வதற்காக தற்காலிகமாக அந்த மசூதிகள் மூடப்பட்டதாக சிங்கப்பூர் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (MUIS) தெரிவித்துள்ளது.

பேஸ்புக் பதிவில், பாசீர் பஞ்சாங் பகுதியில் அமைந்துள்ள மஸ்ஜித் அஹ்மத், 120 தெம்பனிஸ் சாலையில் உள்ள மஸ்ஜித் என்-நயீம் (Masjid En-Naeem) மற்றும் Telok Blangahவில் உள்ள Masjid Temenggong Daeng Ibrahim ஆகியவை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இந்த மாதத்தில் முதல் 2 வாரங்களின் வானிலை எப்படி இருக்கும்?

அந்த மூன்று மசூதிகள் சுத்தம் மற்றும் கிருமி நீக்கம் செய்வதற்காக இன்று புதன்கிழமை மூடப்பட்டதாக MUIS தெரிவித்துள்ளது.

மேலும், நாளை வியாழக்கிழமை முழுமையான சுத்தம் மற்றும் கிருமி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் கூட்டு பிரார்த்தனைகள் மீண்டும் தொடங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அது சம்பந்தப்பட்ட அமைப்புகளின் ஆய்வு மற்றும் உறுதிப்படுத்தல் நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பள்ளிவாசல்களுக்கு சென்ற நபர்களை அடையாளம் காணும் பணிகளை MOH தீவிரமாக மேற்கொண்டு வருவதாக MUIS குறிப்பிட்டுள்ளது.

COVID-19: சாங்கி விமான நிலைய துப்புரவு ஊழியர், தங்கும் விடுதியில் உள்ளவருக்கும் புதிய பாதிப்பு!

இந்த மாதத்திற்கான இந்தியா–சிங்கப்பூர் இருவழி விமான முன்பதிவுகள் தொடக்கம்!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…