‘விறுவிறுன்னு ஏறி இறங்கலாம்’ – ஒரு வழியாக சீரமைப்புப் பணி நிறைவடைந்தது

File Photo Via SBS Transit

சிங்கப்பூரின் 42 MRT நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட மின்படிக்கட்டு சீரமைப்பு பணி நிறைவடைந்தது.நிலையங்களில் வடக்கு-தெற்கு,கிழக்கு-மேற்கு ரயில் பாதைகளைப் பயன்படுத்தும் பயணிகள் மின்படிக்கட்டுகளின் இயக்கத்தில் உள்ள வித்தியாசத்தை உணர முடியும்.

அனைத்து ரயில் நிலையங்களிலும் உச்ச நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் மின்படிக்கட்டுகள் மெதுவான வேகத்தில் இயக்கப்படும்.முதியவர்களும்,சிறுவர்களும் மின்படிக்கட்டுகளில் பாதுகாப்பாக பயன்படுத்த இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.வினாடிக்கு 0.5 மீட்டர் வேகத்தில் இயக்கப்படும்.

சிங்கப்பூரின் மிகப்பழமையான 42 ரயில் நிலையங்களில் 231 மின்படிக்கட்டுகள் கடந்த ஆறு ஆண்டுகளாக படிப்படியாக புதுப்பிக்கப்பட்டு வந்தன.$47.3 மில்லியன் மதிப்பில் மின்படிக்கட்டு சீரமைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது.’ஓட்டிஸ்’ என்ற ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் இந்தத் திட்டம் கையாளப்பட்டது.1987-ஆம் ஆண்டு MRT கட்டமைப்பு தொடங்கப்பட்டதிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பெரிய அளவிலான முதல் சீரமைப்புத் திட்டம் இதுவாகும்.

 

சிக்கலான மின்படிக்கட்டுகளை முழுமையாகப் புதுப்பிக்க எட்டு மாதங்கள் வரை எடுத்தது.எனவே,2021-ஆம் ஆண்டின் இறுதியில் நிறைவடைய இருந்த சீரமைப்புப் பணிகள் Covid-19 தொற்று காரணமாக தாமதமாக நிறைவடைந்தது.சீரமைப்பு பணி தொடங்கப்பட்ட பின்னரே,ஒவ்வொரு மின்படிக்கட்டுக்கும் குறைந்தது நான்கு மாதங்கள் ஆகும் என்பது தெரிய வந்தது.