சிங்கப்பூர் பிரபல தொழிலதிபரும், முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் தலைவருமான ‘முகமது முஸ்தபா’ அவர்களின் பிறந்தநாள் இன்று!

Today is Singapore mustafa Tamil trust owner Musthafa Mohamed M A Birthday

சிங்கப்பூர் பிரபல தொழிலதிபர், முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் தலைவர், சென்னை கவிக்கோ மன்றத்தின் நிறுவனர் மற்றும் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ரஹ்மத் மெட்ரிக் பெண்கள் பள்ளியின் தாளாளர் மு.அ.முகமது முஸ்தபா அவர்கள் பிறந்த தினம் இன்று.

திரு. முஸ்தபா அவர்களை பற்றிய ஒரு சிறு பார்வை;

முஸ்தபா அவர்கள் முத்துப்பேட்டையில் அப்துல் காசிம், ரஹ்மத் அம்மாள் ஆகியோர்க்கு மகனாக நான் 1949 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி பிறந்தார். இவரின் முன்னோர்கள் கப்பல் வணிகத்தில் சிறந்திருந்தாலும் தந்தையார் எளிய நிலையில் வணிகம் நடத்திவந்தார். தந்தையர் அப்துல்காசிம் அவர்கள் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பர்மா உள்ளிட்ட பல நாடுகளில் வணிகம் செய்து வந்தவர்.

முஸ்தபா அவர்களின் குடும்பத்திற்கு ‘நகுதா குடும்பம்’ என்று பெயர். நகுதா என்றால் பாய்மரக்கப்பல் என்று பொருள். அவர்களின் முன்னோர்கள் பாய்மரக் கப்பலில் வணிகம் செய்து வந்தனர்.

சிங்கப்பூர் சென்று வந்தவர்களுக்கு நன்கு அறிமுகமான பெயர் முஸ்தபா. ஆம், நாணயமாற்று நிறுவனங்களில் உலக அளவில் நம்பிக்கைக்குப் பெயர் பெற்ற ஏசியன் எக்சேஞ்சு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை நடத்தும் முஸ்தபா அவர்கள் பிறந்த ஊர் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆகும்.

இப்பொழுது தொழில் நிமித்தமகாச் சிங்கப்பூரில் குடியுரிமை பெற்று இருக்கின்றார். பணம் மாற்று (money exchange) உள்ளிட்ட பல நிறுவனங்களை நடத்தி வருகின்றார். உலக அளவில் தரமான தங்கம் பற்றி நன்கு அறிந்தவர். தமிழகத்திலும் இவருக்குப் பல நிறுவனங்கள் உண்டு. அடிக்கடித் தமிழகத்திற்கு வந்து தமிழக உறவுகளைப் போற்றி வருகின்றார்.

இவருக்கு தமிழில் மீது பற்று மிக அதிகம், தனது புகழ்பெற்ற முத்துப்பேட்டை ரஹ்மத் மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கூட “தமிழில் பேசுவோம்” என்று சுவர் விளம்பரம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.