சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் புதிதாக தொற்று பாதிப்பு!

Singapore dorm covid-19
(Photo: AFP)

சிங்கப்பூரில் இன்றைய (பிப், 23) மதிய நிலவரப்படி, புதிதாக 4 பேருக்கு கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இன்று உள்ளூர் அளவில், வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் ஒருவருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் விளக்குக் கம்பம் விழாமல் தடுத்த 13 பேருக்கு பொதுநல விருது!!

மீதமுள்ள 3 பேரும் வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்கள். அவர்கள் சிங்கப்பூர் வந்தவுடன் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவின்கீழ் தனிமையில் வைக்கப்பட்டனர் என அமைச்சகம் தெரிவித்துள்ளது..

சமூக அளவில் புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.

சிங்கப்பூரில் இதுவரை இந்த கிருமித்தொற்றால் மொத்தம் 59,883 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிய பாதிப்புகள் குறித்த விவரங்கள் இன்று இரவு வெளியிடப்படும்.

சரளமாக மாண்டரின், ஹொக்கியன் மொழி பேசி வாடிக்கையார்களை ஈர்க்கும் இந்திய ஊழியர்!