சிங்கப்பூரில் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் சென்றுவந்த 4 புதிய இடங்கள்

Singapore new locations Covid-19
(PHOTO: google maps)

சிங்கப்பூரில் கோவிட் -19 தொற்று பாதிக்கப்பட்டவர்கள் சென்றுவந்த பொது இடங்களின் பட்டியலில் புதிதாக சில இடங்களை சுகாதார அமைச்சகம் (MOH) சேர்த்துள்ளது.

புதிய பட்டியல்

Joo Chiat காம்ப்ளெக்ஸில் NTUC Fairprice (ஜனவரி 13ஆம் தேதி காலை மணி 11.05 முதல் 11.55 வரை)

105 Hougang Avenue 1இல் Hougang 105 Hainanese Village Centre (ஜனவரி 17ஆம் தேதி காலை மணி 8.45 முதல் 9.30 வரை)

செரங்கூனில் உள்ள Nex மாலில், Food Junction (ஜனவரி 17ஆம் தேதி மாலை மணி 6.45 முதல் 7.30 வரை)

7 Maxwell ரோட்டில் உள்ள Amoy Street Food Centre (ஜனவரி 18ஆம் தேதி மதியம் மணி 12.10 முதல் 1.10 வரை)

சிங்கப்பூரர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த வெளிநாட்டு ஊழியரின் தன்னலமற்ற செயல்!

Table: MOH

குறிப்பிட்ட அந்த இடங்களில் இருந்தவர்கள், அங்கு சென்றுவந்த நாளிலிருந்து 14 நாட்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட இடங்களைப் பொதுமக்கள் தவிர்க்கத் தேவையில்லை என்றும் MOH கூறியுள்ளது.

துப்புரவு மற்றும் கிருமி நீக்கம் குறித்த வழிகாட்டுதல்களை தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வழங்கும் என்று தெரிவித்துள்ளது.

இந்தியா-சிங்கப்பூர் இடையே அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் விமானம் – முன்பதிவு தொடக்கம்!