சிங்கப்பூரில் வேலை தேடுபவர்களுக்கு முக்கிய செய்தி!

racist-passenger-india-Singapore
Pic: Raj Nadarajan/TODAY

புதிய வெளிநாட்டு நெட்வொர்க்குகள் மற்றும் நிபுணத்துவம், புதிய பணி அனுமதி ஆகியவற்றை சிங்கப்பூர் அரசு அறிமுகப்படுத்தியது. இது சிங்கப்பூர் நிறுவனங்கள் வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்துவதை எளிதாக்குகிறது.

இந்த புதிய அனுமதியின் மூலம், மாதத்துக்கு குறைந்தபட்சம் 30,000 சிங்கப்பூர் டாலர்கள் சம்பாதிக்கும் வெளிநாட்டவர்கள் ஐந்தாண்டு பணிக்கான அனுமதியைப் பெற அனுமதி கிடைக்கும். இதில் அவர்களை சார்ந்திருப்பவர்களுக்கு பணி தேடவும் அனுமதி கிடைக்கும்.

விளையாட்டு, கலை, அறிவியல் மற்றும் கல்வித்துறையில் உள்ள விதிவிலக்கான நபர்களும் இதற்கு தகுதியுடையவர்கள். இந்த விண்ணப்பதாரர்களுக்கான நிபந்தனைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

“வணிகங்கள் மற்றும் திறமைகள் என இரு அம்சங்களை சார்ந்தவர்களும் முதலீடு செய்வதற்கும், வாழ்வதற்கும், வேலை செய்வதற்கும் பாதுகாப்பான மற்றும் நிலையான இடங்களைத் தேடுகின்றன.

சிங்கப்பூர் அத்தகைய இடம் என்று சிங்கப்பூரின் மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறினார்.

சிங்கப்பூர் அதன் புதிய பணி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தாது.

விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் மற்றும் நிதி, கலை, கலாச்சாரம் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களை ஈர்க்கும் முயற்சிகளைக் குறிப்பிட்ட டான், இந்த துறைகளில் முன்னேற்றத்தை கொண்டு வருபவர்களை ஈர்க்க தாங்கள் ஆசைப்படுவதாக தெரிவித்தார்.