பிப். 1, 2022 முதல் புதிய Work pass அனுமதி ஒப்புதலுக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்

singapore visa removed

வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடியவர்களில் 50 சதவீதம் பேர் (WFH) ஜனவரி முதல் அலுவலகத்திற்குத் திரும்ப அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதை, கடந்த மாதம் டிச.14 ஆம் தேதி அன்று சுகாதார அமைச்சகம் (MOH) அறிவித்தது.

இருப்பினும், பணியிடத்தில் சமூக ஒன்றுகூடல் தொடர்ந்து அனுமதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, ​​வேலை தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்பவர்கள் எண்ணிக்கை 50 நபர்களாக இருக்க வேண்டும்.

இந்திய பயணிகளுக்கு ஜன. 8 முதல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எளிமையாக்கும் சிங்கப்பூர்

ஜன. 15, 2022 முதல் யார் யார் அலுவலகத்திற்குத் திரும்ப அனுமதிக்கப்படுவர்?

  • முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட ஊழியர்கள்
  • மருத்துவ ரீதியாக தடுப்பூசிக்கு தகுதியற்றவர்கள் என்று சான்றளிக்கப்பட்ட ஊழியர்கள்
  • 180 நாட்களுக்குள் கோவிட்-19இல் இருந்து குணமடைந்த ஊழியர்கள் மட்டுமே பணியிடத்திற்குத் திரும்ப முடியும்.

தடுப்பூசி போடப்படாத அல்லது ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஊழியர்கள், “நெகடிவ்” முடிவு பெற்றிருந்தாலும் கூட அலுவலகம் திரும்ப அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஊழியர்கள், ஜன. 31, 2022 வரை “நெகடிவ்” சோதனை முடிவுடன் தங்கள் பணியிடங்களுக்குச் செல்லலாம், அதன் பிறகு அவர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.

அடுத்த மாதம் பிப். 1, 2022 முதல், புதிய நீண்ட கால அனுமதிகள், Work pass அனுமதிகள் மற்றும் நிரந்தரவாசிகளுக்கான ஒப்புதல் அனுமதிக்கு கட்டுப்பாடு நிபந்தனையாகவும் தடுப்பூசி சான்றிதழ் இருக்கும்.

சிங்கப்பூர் புத்தாண்டு வாணவேடிக்கை: வெடித்து சிதறிய பட்டாசு குடியிருப்பு ஜன்னலை தாக்கும் காணொளி!