சிங்கப்பூரில் இந்த ஆண்டு இறுதிக்குள் 3ஆம் கட்டத் தளர்வு அமலுக்கு வரலாம்..!

COVID-19 Social gathering Phase 3
Social gatherings of up to 8 people may be allowed in Phase 3 (PHOTO: Greg Waldron)

சிங்கப்பூரின் COVID-19 கட்டுப்பாடுகள் தளர்வின் 3ஆம் கட்டத்தில், எட்டு பேர் வரை வீட்டிற்கு வெளியே பொதுஇடங்களில் ஒன்றுகூட அனுமதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த ஒன்றுகூடலுக்கு ஐந்து பேர் வரை அனுமதிக்கப்படுகின்றனர், இது எட்டு பேர் வரை அதிகரிக்கலாம் என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் நேற்று இதனை (அக். 20) தெரிவித்தார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் ஒரு கட்டுமான தளத்தில் தீ விபத்து – 8 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

அதே போல, வீடுகளில் அதிகபட்சமாக எட்டு பேர் வரை அனுமதிக்கப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது ஐந்துக்கும் மேற்பட்ட நபர்களைக் கொண்ட குடும்பங்களை ஒன்றிணைத்து, நேரடியாகச் சந்திக்க வகைசெய்யலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் அடுத்த மூன்றாம் கட்டம் இந்த ஆண்டின் இறுதிக்குள் தொடங்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். இதில் கூடுதலாக மற்ற நாடுகளுடன் பயண ஏற்பாடுகள் அனுமதிக்கப்படலாம்.

அதிகபட்ச குழுக்களின் அளவை 10 ஆக உயர்த்துவது குறித்து அதிகாரிகள் கலந்து யோசித்தனர், ஆனால் 10 பேர் ஒன்றுகூடினால் உணவகங்கள் போன்ற பொது இடங்களில் பாதுகாப்பு இடைவெளிகளை செயல்படுத்துவது கடினம் என்று உணர்ந்ததாக பணிக்குழுவின் இணைத் தலைவரான திரு கான் கூறினார்.

அதே போல, மூன்றாம் கட்ட தளர்வுகளை எதிர்நோக்கி காத்திருந்தாலும் மீண்டும் பழைய வழக்கநிலைக்கு திரும்ப முடியாது என்று திரு. கான் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : இரண்டாவது முறையாக மரண தண்டனையில் இருந்து தப்பிய வெளிநாட்டு ஆடவர்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…