வெளிநாட்டு ஊழியர்களின் சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை நாங்கள் கவனித்துக் கொள்வோம் – பிரதமர் லீ..!

Singapore PM Lee Hsien Loong released a video address
Singapore PM Lee Hsien Loong released a video address about on foreign workers

சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்கள் மீது அதிக அக்கறை கொண்டுள்ளது என்று பிரதமர் லீ சியென் லூங் (ஏப்ரல் 10) தெரிவித்துள்ளார்.

முகநூல் வழியாக சிங்கப்பூர் நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது பிரதமர் லீ இதனை தெரிவித்தார். மேலும், சிங்கப்பூரின் வளர்ச்சியில் வெளிநாட்டு ஊழியர்களின் பங்களிப்பை குறிப்பிட்டு அவர் பாராட்டினார்.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் ஏழாவது நபர் உயிரிழப்பு – சுகாதார அமைச்சகம் (MOH)..!

வெளிநாட்டு ஊழியர்களின் நல்வாழ்க்கை குறித்து அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் இயன்ற அனைத்தையும் செய்து, அவர்களது நலனை கவனித்துக்கொள்வோம் என்றும் பிரதமர் லீ கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் சமீபத்திய நோய்த்தொற்று சம்பவங்களின் கணிசமான எண்ணிக்கை, வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியுடன் தொடர்புடையது.

ஊழியர்களுக்கு சம்பளம், அவர்களின் குடும்பங்களுக்கு பணம் அனுப்புவதையும் உறுதிசெய்ய அவர்களின் முதலாளிகளுடன் இணைந்து செயல்பட்டிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.

மேலும், “தேவையிருப்பின், அவர்களுக்கு மருத்துவப் பராமரிப்பும் சிகிச்சையும் வழங்குவோம்,” என்று தமது உரையில் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் மேலும் புதிதாக 198 பேர் பாதிப்பு – மொத்த எண்ணிக்கை 2,108ஆக உயர்வு..!

கூடுதலாக பிரதமர் கூறுகையில், “அவர்களது குடும்ப உறுப்பினர்கள் எவரேனும் எனது காணொளியைப் பார்த்தால், அவர்களிடம் நான் இதனைக் கூறுகிறேன்.”

“சிங்கப்பூரில், உங்களது மகன்கள், தந்தையர், கணவர்கள் ஆகியோரின் உழைப்பையும் பங்களிப்பையும் நாங்கள் போற்றுகிறோம். அவர்களது நலனில், எங்களுக்குப் பொறுப்பு உள்ளதை, நாங்கள் உணர்கிறோம்” என்றார்.

“நாங்கள், எங்களால் இயன்ற அனைத்தையும் செய்து, அவர்களது சுகாதாரம், வாழ்வாதாரம், நலன் ஆகியவற்றை இங்குக் கவனித்துக்கொள்வோம், மீண்டும் உங்களிடம் பத்திரமாகத் திரும்பி வரச் செய்வோம்.”

“அனைத்து சிங்கப்பூரர்களின் சார்பாக, நீங்கள் நலத்துடன் இருக்க நான் வேண்டுகிறேன் ” என்றும் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க : COVID-19: இந்தியரின் மரணத்துக்கு வைரஸ் தொற்று காரணம் இல்லை: சுகாதார அமைச்சகம் (MOH)..!

#coronavirusSingapore #coronavirusnews #coronavirusupdateinSingapore #Tamilnews #coronavirusupdate #coronavirusSingaporecases #coronavirusinSingapore #SingaporeLatestTamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil