“குடும்பங்களும், நண்பர்களும் கூடும்போது, தொடர்ந்து பாதுகாப்பாக இருங்கள்”- பிரதமர் லீ சியன் லூங் அறிவுறுத்தல்!

Photo: Singapore Prime Minister Official Facebook Page

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் தினம் இன்று (25/12/2021) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. குறிப்பாக, சிங்கப்பூரில் கொரோனா நோய் பரவலுக்கு மத்தியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை பொதுமக்கள் அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி சிறப்பாகக் கொண்டாடினர். சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப், வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

10 டாலர் போதும்! மலிவான செலவில் சிங்கப்பூருக்குள் பயணிக்கும் வழிமுறை – முதல் முறை வருபவர்களுக்கு கட்டாயம் பயனுள்ள தகவல்!

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “கொரோனா நோய்த்தொற்று சூழலில் நாம் மீண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுகிறோம். கொரோனாவுக்கு எதிரான போராட்டம் இன்னும் முடியவில்லை; குறிப்பாக Omicron மாறுபாட்டுடன். ஆனால் அதிர்ஷ்டவசமாக, நாம் கடந்த டிசம்பர் மாதத்தை விட தற்போது சிறந்த நிலையில் இருக்கிறோம்.

காணாமல் போன ஆடவரை தேடிவரும் போலீசார் – தகவல் தெரிந்தால் தெரிவிக்குமாறு கோரிக்கை

இந்த பண்டிகைக் காலத்தைக் கொண்டாட குடும்பங்களும், நண்பர்களும் கூடும்போது, தொடர்ந்து பாதுகாப்பாக இருங்கள். மேலும் ஆரோக்கியத்தைப் பரிசாகக் கொடுங்கள். அனைவருக்கும் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.