2020 ஆம் ஆண்டின் பொது விடுமுறை நாட்கள்…

அடுத்த ஆண்டின் (2020) பொது விடுமுறை நாட்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் மொத்தம் பொது விடுமுறை 11 நாட்கள் ஆகும்.

சிங்கப்பூர் வாழ் வெளிநாட்டவர்கள் மற்றும் குடிமக்கள் இந்த விடுமுறை தினங்களை பயன்படுத்தி தங்களின் பயணங்களை அமைத்து கொண்டு பயன் பெறலாம். சுற்றுலா செல்பவர்கள் இந்த விடுமுறை தினங்களை முன்கூட்டியே திட்டமிட்டு விமான முன்பதிவுகள் செய்வதன் மூலம் இறுதி நேர தடங்கல்களை தவிர்க்கலாம்.

ஏப்ரல் 10 ஆம் தேதி புனித வெள்ளி, மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினம், ஜூலை 31 ஆம் தேதி ஹஜ்ஜுப்பெருநாள், டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் ஆகிய விடுமுறை தினங்கள் அனைத்தும் வெள்ளிக்கிழமைகளில் வருகிறது.

அதேபோல் ஜனவரி 26 ஆம் தேதி சீனப்புத்தாண்டு, மே 24 ஆம் தேதி நோன்பு பெருநாள், ஆகஸ்ட் 9 ஆம் தேதி தேசிய தினம் ஆகியவை ஞாயிற்றுக்கிழைமைகளில் இடம்பெறுகின்றன.

2020 ஆண்டின் பொது விடுமுறை நாட்கள் பட்டியல் பின்வருமாறு :

Image Credits – Seedly