சிங்கப்பூரின் 2022ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள்!

(Photo: Urban Redevelopment Authority)

சிங்கப்பூரின் 2022ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் குறித்த விவரங்களை மனிதவள அமைச்சு (MOM) வெளியிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஐந்து நீண்ட வார இறுதி நாட்கள் இருக்கும் என்றும் கூறியுள்ளது. அதாவது வெள்ளி, திங்கள் மற்றும் செவ்வாய் மற்றும் இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் பொது விடுமுறைகள் வருகின்றன.

ஞாயிற்றுக்கிழமை 3 பொது விடுமுறைகள்:

  • தொழிலாளர் தினம் (மே 1)
  • விசாக தினம் (மே 15)
  • கிறிஸ்துமஸ் தினம் (டிசம்பர் 25)

இரண்டு பொது விடுமுறைகள் திங்களன்று வரும்:

  • நோன்புப் பெருநாள் (மே 2)
  • தீபாவளி (அக் .24)
  • மே 3 செவ்வாய்க்கிழமை பொது விடுமுறையாகவும் இருக்கும்.

ஒரு பொது விடுமுறை வெள்ளிக்கிழமை அன்று வருகிறது:

  • புனித வெள்ளி (ஏப்ரல் 15)

மற்ற பொது விடுமுறைகள்:

  • புத்தாண்டு தினம் (ஜன 1)
  • சீன புத்தாண்டு (பிப்ரவரி 1 மற்றும் பிப்ரவரி 2)
  • ஹஜ் பெருநாள் (ஜூலை 9)
  • தேசிய தினம் (ஆகஸ்ட் 9)