சிங்கப்பூரில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவு மழைப்பொழிவு!

Singapore rain weather
(Photo: So Solomon)

சிங்கப்பூரில் இந்த புதிய ஆண்டின் தொடக்க மாதத்தில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இதுவரை மழை பெய்துள்ளது.

நேற்று மாலை 5 மணி நிலவரப்படி, 183 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இந்த மாத நிலவரப்படி, இதுவரை 630 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறப்புப் பயண ஏற்பாட்டுத் திட்டத்தில் இவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்!

மேலும் காற்று மற்றும் மழை தொடரும் என்றும், வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் வரை குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

பாசிர் ரிஸ், சாங்கி, தெம்பனிஸ் உள்ளிட்ட கிழக்கு பகுதிகளில் மிக அதிகமான மழை பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் அல்லது மரக்கிளைகள் முறிந்து விழுந்தன, சில இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.

சிங்கப்பூரில் தீப்பற்றி எரிந்த கார்… காணொளி!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…