உலகளவில் ஊழல் குறைந்த நாடுகளின் தரவரிசை பட்டியலில் சிங்கப்பூர்..!

Singapore ranks 4th for least corruption in public sector

பொதுத்துறையில் மிகக் குறைவான ஊழல் இருப்பதாக கருதப்படும் நாடுகளின் வருடாந்திர தரவரிசை பட்டியலில் சிங்கப்பூர் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

மேலும், சுவிட்சர்லாந்து மற்றும் சுவீடன் சிங்கப்பூருடன் இணைந்து அதே இடத்தைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க : இந்தியாவின் 71வது குடியரசு தினம்; சிங்கப்பூரில் வெகு விமர்சையாக நடைபெற்ற கொண்டாட்டம்…!

கிராஃப்ட் வாட்ச் டாக் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனலின் 2019 – வெளியிட்டுள்ள ஊழல் குறியீட்டில், 85 மதிப்பெண்களை மூன்று நாடுகளும் பெற்றுள்ளன. மேலும், இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் ஆசிய நாடுகளில் சிங்கப்பூர் மட்டுமே உள்ளது.

டென்மார்க் மற்றும் நியூசிலாந்து இந்த குறியீட்டில் 87 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துள்ளன. மேலும் நார்வே 84, நெதர்லாந்து (82), ஜெர்மனி மற்றும் லக்சம்பர்க் (இரண்டும் 80) மதிப்பெண்களைப் பெற்றுள்ளன.

இதையும் படிங்க : வூஹான் வைரஸ்; “அமைதியாகவும் ஆனால் கவனமாகவும் இருக்க வேண்டும்” – பிரதமர் லீ…!

“இதில் அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கையிலான நாடுகள் ஊழலைக் கையாள்வதில் எந்த நடவடிக்கையும் காட்டவில்லை” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூடுதலாக, 180 நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு 50க்கு கீழே மதிப்பெண் பெற்றுள்ளது, மேலும் சராசரியாக 43 மதிப்பெண்களுடன், 2018 ஆம் ஆண்டை ஒத்திருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.