இந்தியாவுக்கு S$3.2 மில்லியனுக்கும் அதிகமான மருத்துவ பொருட்களை அனுப்பிய சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கம்

Singapore Red Cross raises more than S$3.2 million in donations to help India fight COVID-19
(Photo: Singapore Red Cross)

இக்கட்டான சூழலில் உள்ள இந்தியாவுக்கு உதவ, நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து சுமார் S$3.2 மில்லியனுக்கும் அதிகமான நன்கொடைகளை சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கம் பெற்றுள்ளது.

அதில், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் வென்டிலேட்டர்கள் ஆகியவற்றை இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு நேரடியாக அனுப்பி உதவியுள்ளது.

இந்த மாதம் சிங்கப்பூரிலிருந்து திருச்சி, சென்னை, மதுரை செல்லும் விமானங்களின் புதிய அட்டவணை…!

குறிப்பாக, நோயாளிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு நேரடியாக கிடைக்கும் வகையில் இந்த உதவி செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள், வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் உள்ளவர்களுக்கும் சுகாதாரம் மற்றும் மருத்துவ கருவிகளும் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் COVID-19 தொற்றுநோய் தடுப்பு போரில் பணிபுரியும் முன்னணி தொழிலாளர்கள் மற்றும் தன்னார்வலர்களும் அதில் பொருட்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நீங்கள் நன்கொடை அளிக்க விரும்பினால், www.giving.sg/singapore-red-cross.. என்ற இணையம் வழியாகப் வழங்கலாம்.

சிங்கப்பூரில் பணியாற்றிய தமிழக நிதி அமைச்சர்!!