சிங்கப்பூர் ரீடிஸ்கவர் பற்றுச்சீட்டு விண்ணப்பங்களின் மதிப்பு S$178 மில்லியன்

Photo: Travel Triangle

கிட்டதட்ட 1.2 மில்லியன் சிங்கப்பூரர்களில் பெரியவர்கள், சிங்கப்பூர் ரீடிஸ்கவர் என்னும் சிங்கப்பூரை மீண்டும் ரசிப்பதற்கான பற்றுச்சீட்டுகளைக் குறைந்தது ஒருமுறையேனும் பயன்படுத்தியிருப்பதாக சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் தெரிவித்துள்ளது.

சுமார் 1.5 மில்லியன் பரிவார்த்தனைகள் பதிவாகியிருப்பதாகவும், பரிவர்த்தனைகளின் மதிப்பு சுமார் S$178 மில்லியன் எனவும் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் பகுதிநேர வீட்டு பராமரிப்பு சேவைகளுக்கான தேவை அதிகரிப்பு

கோவிட் – 19 சூழலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுப்பயணத் துறைக்கு உதவும் விதமாக சிங்கப்பூர் ரீடிஸ்கவர் பற்றுச்சீட்டுத் திட்டம் 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டது.

சாங்கி ரெக்கமெண்ட்ஸ், குளோபல்டிக்ஸ், ட்ரிப்டாட்காம், ட்ரேவலோக்கா, குளூக் ஆகிய 5 இணையத் தளங்களில் பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

2021 டிசம்பர் மாதம் 31ஆம் தேதிக்குள் 18 வயதைத் தாண்டிய சிங்கப்பூரர்கள் அனைவரும், S$100 மதிப்புள்ள பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்த வேண்டும். மேலும் சுற்றுலா பயணங்கள் மற்றும் ஹோட்டல்களிலும் இச்சீட்டுகளைப் பயன்படுத்தலாம்.

பற்றுச்சீட்டுகளை அதிகமானோர் பயன்படுத்துவதற்காக, குளூக், யுஓபி ட்ராவல் பிளேனர்ஸ் ஆகிய இரண்டும் அவற்றைப் பெற்றுக் கொள்வோருக்கு சுமார் S$40,000 மதிப்புள்ள தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் பற்றுச்சீட்டுகளை வழங்கி வருகின்றது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு நன்றியைத் தெரிவிப்பதற்காக தேவையான உதவிகளை செய்துவரும் பெண்