வெளிநாட்டினருக்கு நற்செய்தி: செப்டம்பரில் எல்லைகள் மீண்டும் திறக்கப்படலாம்..!

Changi Airport stole Woman arrested
Pic: TODAY

சிங்கப்பூரில் உள்ள மக்கள் தொகையில் சுமார் 80 விழுக்காட்டினர் செப்டம்பர் மாதம் தொடக்கத்திற்குள் முழுமையாக தடுப்பூசி போட்டிருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

அப்போது சிங்கப்பூரில் கூடுதலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் என்றும், அதிகமானோர் ஒன்றுகூடலில் ஈடுபட முடியும் என்றும் அமைச்சர்நிலை அறிக்கையை வெளியிட்டபோது அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.

குடியிருப்பின் கீழே இறந்துகிடந்த பெண் (காணொளி) – விசாரணை தொடர்கிறது

மேலும், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி உள்ள நாடுகளுடனான எல்லைகள் மீண்டும் திறக்கப்படலாம் என்றும், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.

முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் சிங்கப்பூர் திரும்பி வரும்போது வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவின் முழு 14 நாள் காலத்தை ஹோட்டலில் நிறைவேற்றவேண்டிய அவசியம் இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளலாம் அல்லது விரிவான பரிசோதனைத் திட்டத்திற்கு உட்படுத்தப்படலாம் என்றும், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களும் பயணம் மேற்கொள்ளமுடியும் என்றும், இருப்பினும் அவர்கள் நடைமுறையில் உள்ள எல்லை கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படுவர்கள் எனவும் அமைச்சர் லாரன்ஸ் வோங் கூறினார்.

வெளிநாட்டு ஊழியர்களை அழைத்து வருவதற்கான திட்டம் – பாதுகாப்பு நெறிமுறைகள் அவசியம்