COVID-19: சிங்கப்பூரில் மேலும் 106 பேருக்கு தொற்று உறுதி..!

Singapore reports 106 new cases of COVID-19
Singapore reports 106 new cases of COVID-19

சிங்கப்பூரில் புதிதாக 106 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று (ஏப்ரல் 7) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இதுவரை சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 1,481ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : COVID-19: வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை மீறி செய்தித்தாள் வழங்க சென்றவர் மீது குற்றச்சாட்டு..!

குணமடைந்தோர்

மேலும், அன்றைய நிலவரப்படி மருத்துவமனையிலிருந்து மேலும் 33 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று MOH தெரிவித்துள்ளது.

தற்போது வரை மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 377ஆக உள்ளது.

மருத்துவமனையில் உள்ளோர்

மருத்துவமனையில் இன்னும் 627 உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

மருத்துவமனையில் உள்ள பெரும்பாலானோரின் உடல்நிலை சீராகவோ அல்லது மேம்பட்டோ வருகிறது.

மேலும், 29 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர் என்றும் MOH குறிப்பிட்டுள்ளது.

புதிய சம்பவங்கள்

புதிய சம்பவங்களில், 3 பேர் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்.

மேலும் பாதிக்கப்பட்டோரில் 39 பேர் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியுடன் தொடர்புடையவர்கள்.

41 புதிய நபர்களுக்கு தொடர்பு கண்டறிதல் நிலுவையில் உள்ளதாக MOH குறிப்பிட்டுள்ளது.

உள்நாட்டில் பதிவான சம்பவங்களில் 52 பேர் குழுமங்களுடன் தொடர்புடையவர்கள் என்றும், மேலும் 10 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டோருடன் தொடர்பு இருந்ததாகவும் MOH குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரில் இதுவரை மொத்தம் ஆறு பேர் இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் 15,000 கிலோ உணவை நன்கொடையாக வழங்கிய மெரினா பே சாண்ட்ஸ்..!