கொரோனா வைரஸ்; மேலும் 12 புதிய COVID-19 சம்பவங்களை உறுதிப்படுத்திய சிங்கப்பூர்

Singapore reports 12 new COVID-19 cases
Singapore reports 12 new COVID-19 cases (File photo: Facebook/SAFRA Jurong)

சிங்கப்பூர் மேலும் 12 புதிய COVID-19 சம்பவங்களை (மார்ச் 8) உறுதிப்படுத்தியுள்ளது. இதில் ஒன்பது சம்பவங்கள் சாஃப்ரா ஜுராங் வட்டாரத்துடன் தொடர்புடையவை என்று தெரிவித்துள்ளது.

சாஃப்ரா ஜுராங் வட்டாரத்துடன் தொடர்புடைய மொத்த சம்பவங்கள் 30ஆக உள்ளன என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் போலியான பொருட்கள் விற்பனை; 3 பேர் கைது – $239,000 மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்..!

சமீபத்திய நோய்த்தொற்று சம்பவங்களுடன் சிங்கப்பூரின் பதிவாகியுள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை 150ஆக உள்ளது.

மற்ற மூன்று புதிய சம்பவங்களில், ஒன்று முந்தைய சம்பவத்துடன் தொடர்புடையது, ஒன்று இந்தோனேசிய நாட்டவர், மற்றொன்று தற்போதைய சம்பவங்களுடன் எந்த தொடர்பும் இல்லை என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில் தொண்ணூறு நபர்கள் தொற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டு மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

அறுபது நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், பெரும்பாலானவர்கள் சீராகவும் அல்லது மேம்பட்ட நிலையில் உள்ளனர் என்று MOH தெரிவித்துள்ளது.

மேலும், தீவிர சிகிச்சை பிரிவில் ஒன்பது பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் ஏற்பட்ட சாலை விபத்தில் 9 வயது சிறுமி உட்பட 5 பேர் காயம்..!