இந்தியா செய்திகள் சிங்கப்பூர் செய்திகள்

இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் திரும்பியவருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Singapore reports 246 new COVID-19 infections, including 1 imported case
Singapore reports 246 new COVID-19 infections, including 1 imported case (Photo: CNBC TV18)

சிங்கப்பூரில் நேற்று (ஜூன் 30) ​​நண்பகல் நிலவரப்படி 246 புதிய COVID-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது, இதில் வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு பெண்மணி அடங்குவார்.

வெளிநாட்டில் இருந்து வந்த அந்த பெண், ஜூன் 24 அன்று இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் திரும்பிய நிரந்தரவாசி என்று சுகாதார அமைச்சகம் (MOH) செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் 78 வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் கிருமித்தொற்று முற்றிலும் இல்லை..!

சிங்கப்பூருக்கு வந்தபின், அவருக்கு 14 நாள் தனிமைப்படுத்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று MOH குறிப்பிட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் அவருக்கு கிருமித்தொற்றுக்கான அறிகுறி ஏற்பட்டதாக MOH தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் நேற்றைய நிலவரப்படி, மொத்த COVID-19 சம்பவங்களின் எண்ணிக்கை 43,907ஆக உள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 246 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
👉🏻 Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
👉🏻 Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
👉🏻 Twitter      https://twitter.com/tamilmicsetsg
👉🏻Telegram  https://t.me/tamilmicsetsg
👉🏻 Sharechat https://sharechat.com/tamilmicsetsg

Related posts