COVID-19: சிங்கப்பூரில் புதிதாக 49 பேருக்கு தொற்று உறுதி; புதிதாக சிங்போஸ்ட் சென்டரில் 3 பேர் பாதிப்பு..!

Singapore reports 49 new COVID-19 cases
Singapore reports 49 new COVID-19 cases, new cluster at SingPost Centre (Photo: Singapore Post)

சிங்கப்பூரில் புதிதாக 49 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று (மார்ச் 27) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இதுவரை சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 732ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் நடப்புக்கு வந்த புதிய பாதுகாப்பு விதிமுறை; மீறுபவர்களுக்கு சிறை மற்றும் அபராதம்..!

குணமடைந்தோர்

மேலும், அன்றைய நிலவரப்படி மருத்துவமனையிலிருந்து மேலும் 11 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று MOH தெரிவித்துள்ளது.

தற்போது வரை மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 183ஆக உள்ளது.

மருத்துவமனையில் உள்ளோர்

மருத்துவமனையில் இன்னும் 432 உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

மருத்துவமனையில் உள்ள பெரும்பாலானோரின் உடல்நிலை சீராகவோ அல்லது மேம்பட்டோ வருகிறது.

மேலும், 17 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர் என்றும் MOH குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே இருவர் உயிரிழந்துள்ளனர்.

புதிய சம்பவங்கள்

புதிய சம்பவங்களில், 22 நபர்கள் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் என்று MOH குறிப்பிட்டுள்ளது. இவர்கள் ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஆசியான் (ASEAN) ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்துள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

புதிய சம்பவங்களில், 18 பேர் முன்னர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவரோடு அல்லது குழுவோடு தொடர்புடையவர்கள்.

மேலும் 9 புதிய நபர்களுக்கு எதனுடனும் தொடர்பு கண்டறியப்படவில்லை என்று MOH குறிப்பிட்டுள்ளது.

ஃபெங்ஷானில் (Fengshan) உள்ள PCF Sparkletots பள்ளி சம்பந்தப்பட்ட குழுவுடன் 5 புதிய சம்பவங்களுக்கு தொடர்புள்ளது என்று MOH தெரிவித்துள்ளது. இந்த குழுவில் தற்போது வரை, மொத்தம் 25 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மூன்று நபர்கள் (சம்பவம் 581, 689 மற்றும் 724) புதிதாக அடையாளம் காணப்பட்ட புதிய குழு, 10 யூனோஸ் சாலை 8-இல் உள்ள சிங்போஸ்ட் நிலையத்துடன் (SingPost Centre) தொடர்புடையது என்று MOH தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : COVID-19: வெளிநாட்டு ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடு; மீறினால் வேலை அனுமதி ரத்து – MOM..!

#coronavirusSingapore #coronavirusnews #coronavirusupdateinSingapore #Tamilnews #coronavirusupdate #coronavirusSingaporecases #coronavirusinSingapore #SingaporeLatestTamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil