COVID-19: சிங்கப்பூரில் இதுவரை 20,000-க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்..!

சிங்கப்பூரில் COVID-19 தொற்றிலிருந்து இதுவரை 20,000-க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சிங்கப்பூரில் COVID-19 தொற்றிலிருந்து 1,096 நபர்கள் மருத்துவமனைகள் அல்லது சமூக தனிமைப்படுத்தும் வசதிகளிலிருந்து வீடு திரும்பினர் என்று சுகாதார அமைச்சகம் (MOH) குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களை தங்கவைக்க பள்ளி வளாகம் ஏற்பாடு..!

மொத்தம் 20,727 பேர் தொற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

மேலும் 374 உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவற்றில், பெரும்பாலான நபர்கள் சீராகவோ அல்லது மேம்பட்டோ வருகின்றனர். மேலும் 7 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர் என்றும் MOH தெரிவித்துள்ளது.

மேலும் 13,242 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சமூக மருத்துவ சிகிச்சை வசதிகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுவரை மொத்தம் 23 பேர் உயிரிழந்துள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

புதிய சம்பவங்கள்

சிங்கப்பூரில் நேற்றைய (மே 30) நிலவரப்படி, புதிதாக 506 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

தற்போதுவரை, சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 34,366ஆக உயர்ந்துள்ளது.

இந்த புதிய சம்பவங்களில், மொத்தம் 501 பேர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வேலை அனுமதியுடைய வெளிநாட்டு ஊழியர்கள் என்றும் MOH குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சர்கியூட் பிரேக்கர் அதிரடி நடவடிக்கைகள் தளர்த்தப்பட்ட பிறகு ஆட்குறைப்பு அதிகமாகலாம் – மனிதவள அமைச்சர்..!