COVID-19: சிங்கப்பூர் வீராசாமி ரோட்டில் உள்ள கடைவீட்டில் வசிக்கும் 13 பேர் பாதிப்பு..!

Singapore reports 517 new COVID-19 cases, including 15 asymptomatic cases in the community
Singapore reports 517 new COVID-19 cases, including 15 asymptomatic cases in the community (File Photo: Google Maps)

சிங்கப்பூரில் நேற்றைய (ஜூன் 4) நிலவரப்படி, புதிதாக 517 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

அதாவது தற்போதுவரை, சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 36,922ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் 4 புதிய நோய் பரவல் குழுமங்கள் அடையாளம்; 300க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்..!

இதில் 15 பேர் சமூக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

அவர்களில் 13 பேர், வீராசாமி ரோட்டில் உள்ள கடைவீட்டில் முன்னர் COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டவருடன் தங்கியிருந்தவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக அளவில் பாதிக்கப்பட்ட அந்த 15 பேரிடமும் நோய்க்கான அறிகுறி ஏதும் தென்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

புதிய சம்பவங்களில், 502 பேர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் ஆவார்கள்.

அவர்களில் 99 சதவீதம் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட தொற்று பாதித்த இடங்களுடன் தொடர்புடையவர்கள்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு சவால்களை சமாளிப்பதற்கு பங்களிக்காத முதலாளிகளுக்கு கடும் விசாரணை..!