COVID-19: சிங்கப்பூரில் ஆறாவது நோயாளி உயிரிழப்பு – சுகாதார அமைச்சகம்..!

Singapore reports 6th COVID-19 death
Singapore reports 6th COVID-19 death

சிங்கப்பூரில் ஆறாவது நபர் COVID-19 நோயால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த அவர், 88 வயதான சிங்கப்பூர் நிரந்தரவாசி ஆவார். மேலும் அவர் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சமீபத்தில் பயணம் மேற்கொள்ளவில்லை என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் பிரதமர் லீக்கு COVID-19 இருப்பதாக பரவும் குறிப்பு போலியானது- SGH மருத்துவமனை..!

அவருக்கு இதயம் மற்றும் சிறுநீரக நோய், புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய் இருந்ததாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

கடந்த மார்ச் 29 அன்று COVID-19 அவருக்கு உறுதிசெய்யப்பட்டது. பின்னர், மறுநாள் தேசிய தொற்று நோய்களுக்கான மையத்தில் (NCID) அனுமதிக்கப்பட்டார்.

மேலும் அவர் மார்ச் 30 முதல் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார், ஆனால் கடுமையான மருத்துவ சிக்கல்கள் காரணமாக சனிக்கிழமை அதிகாலை 5.41 மணிக்கு உயிரிழந்தார் என்று MOH தெரிவித்துள்ளது.

அவருடைய குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கும் NCID, தேவையான உதவிகளைச் செய்து வருகிறது என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 65 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி – சுகாதார அமைச்சகம்..!

#coronavirusSingapore #coronavirusnews #coronavirusupdateinSingapore #Tamilnews #coronavirusupdate #coronavirusSingaporecases #coronavirusinSingapore #SingaporeLatestTamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil