சிங்கப்பூரில் புதிதாக 73 பேருக்கு COVID-19 தொற்று உறுதி..!

சிங்கப்பூரில் புதிதாக 73 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று (மார்ச் 25) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இதுவரை சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 631ஆக உயர்ந்துள்ளது.

குணமடைந்தோர்

மேலும், அன்றைய நிலவரப்படி மருத்துவமனையிலிருந்து மேலும் 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று MOH தெரிவித்துள்ளது.

தற்போது வரை மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 160ஆக உள்ளது.

மருத்துவமனையில் உள்ளோர்

மருத்துவமனையில் இன்னும் 404 உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

மருத்துவமனையில் உள்ள பெரும்பாலானோரின் உடல்நிலை சீராகவோ அல்லது மேம்பட்டோ வருகிறது.

மேலும், 17 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர் என்றும் MOH குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே இருவர் உயிரிழந்துள்ளனர்.

புதிய சம்பவங்கள்

புதிய சம்பவங்களில், 38 நபர்கள் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

புதிய சம்பவங்களில், 27 பேர் முன்னர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவரோடு அல்லது குழுவோடு தொடர்புடையவர்கள்.

மேலும் 8 புதிய நபர்களுக்கு எதனுடனும் தொடர்பு கண்டறியப்படவில்லை என்று MOH குறிப்பிட்டுள்ளது.

#coronavirusSingapore #coronavirusnews #coronavirusupdateinSingapore #coronavirusupdate #coronavirusSingaporecases #coronavirusinSingapore #SingaporeLatestTamilnews #Tamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil