COVID-19: ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் 725 பேர் பாதிப்பு..!

வெளிநாட்டு ஊழியர்களுக்கான Work pass விதிகள் - தவறிழைக்கும் ஊழியர்களுக்கான எச்சரிக்கை
(Photo: NYTimes)

சிங்கப்பூரில் நேற்றைய (மே 7) நிலவரப்படி, புதிதாக 741 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

அதாவது தற்போதுவரை, சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 20,939ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : 234 பயணிகளுடன் ஏர் இந்தியா ‘வந்தே பாரத் மிஷன்’ விமானம் சிங்கப்பூரிலிருந்து டெல்லி புறப்பட்டது..!

புதிய சம்பவங்கள்

புதிய சம்பவங்களின், ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் 725 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 9 பேர் ஊழியர் தங்கும் விடுதிகளில் அல்லாது பிற இடங்களில் வசிக்கும் வேலை அனுமதி உடையோர்.

புதிய சம்பவங்களில் சமூக அளவில் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள் மற்றும் இரண்டு வேலை அனுமதி பெற்றவர்களும் அடங்குவர்.

புதிய குழுமங்கள்

மேலும் 6 நோய் பரவல் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக MOH தெரிவித்துள்ளது.

  • 5 Sixth Lok Yang Road
  • 98 Kaki Bukit Industrial Terrace
  • Sungei Kadut Avenue
  • 5 Tech Park Crescent
  • 3 Tuas Drive 1
  • 52 Tuas View Square

மேலும் மரீனா பே சாண்ட்ஸில் உள்ள Black Tap உணவகம் கிருமித்தொற்றுக் குழுமங்களுக்கான பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுமத்துடன் சம்பந்தப்பட்ட நோய் தொற்று காரணமாக கடந்த 28 நாள்களில் எவரும் பாதிக்கப்படவில்லை.

இதையும் படிங்க : COVID -19: சிங்கப்பூரில் கிருமித்தொற்று எண்ணிக்கை இம்மாதம் 40,000 வரை உயரலாம்..!