சிங்கப்பூரில் தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள் – ஊழியர்களுக்கு….

(PHOTO: The Business Times)

கொவிட்-19 கிருமித்தொற்று தொடர்பான கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருவதால் ஏப்ரல் 5 முதல் பெரும்பாலான ஊழியர்கள் தங்கள் அலுவலகத்திற்கு செல்லக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை இனி மாற இருப்பதாக கொவிட்-19 அமைச்சுக்கள் பணிக்குழுவின் இணைத் தலைவர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள் – தெரிந்து கொள்வோம்!

மேலும், ஒரே நேரத்தில் பணியிடத்திற்கு செல்லக்கூடியவர்களின் விகிதமானது 75% உயர்த்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து, ஊழியர்கள் பாதி அளவு வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டும் என்ற தற்போதைய கட்டுப்பாடுகள் விளக்கப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வேலை தொடங்கும் நேரத்தை இரண்டு வெவ்வேறு பிரிவினருக்கு வேறு விதமாக மாற்றிக்கொள்ளவும், வேலை நேரத்தில் நீக்குப்போக்கு முறையை கடைபிடிக்கவும் முதலாளிகளை ஆர்வமூட்டுவதாகவும், மேலும் முதலாளிகள் நடப்பில் இருக்கும் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் திரு வோங் கூறியுள்ளார்.

குழுக்கள் இணைப்பு நடவடிக்கைகள் போன்ற வெளியிடங்களில் முதலாளிகள் செய்யும் நிகழ்ச்சிகள் அனுமதிக்கப்படும் என்றும், அதிகப்படியாக இந்த நிகழ்வுகளில் எட்டு நபர்கள் மட்டுமே கலந்துகொள்ளவேண்டும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பொது இடங்களை சுத்தம் செய்வது, பாதுகாப்பான இடைவெளியை கடைபிடிப்பது, எல்லா நேரமும் முகக்கவசம் அணிவது போன்ற பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவது குறித்து முதலாளிகள் உறுதி செய்யவேண்டும் என்று மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்க தவறும் முதலாளிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மேலும், மூடல் உத்தரவும் இதில் அடங்கும் என்றும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

COVID-19 தடுப்பூசி திட்டம் தற்போது 45 முதல் 59 வயதுடையவர்களுக்கு துவக்கம்