சிங்கப்பூரில் நடைபாதையில் சென்ற சிறுமி மீது சைக்கிளில் மோதிய ஆடவர் கைது

Singapore Riding bicycle into girl
(Google Maps street view and Unsplash)

கவனக்குறைவு காரணமாக கடுமையான காயத்தை ஏற்படுத்திய வழக்கில் 18 வயது இளையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிங்கப்பூர் காவல் படையினர் கூறுகையில், நடைபாதையில் சென்றுகொண்டிருந்த 8 வயது சிறுமி மீது, எதிர் திசையில் சைக்கிளில் வந்த இளையர் ஒருவர் மோதியதாக கூறியுள்ளனர்.

கொரோனா: வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் ஒருவர், சமூகத்தில் 4 பேர் உட்பட 24 பேர் பாதிப்பு

புக்கிட் படோக் ஸ்ட்ரீட் 52இல் (Bukit Batok Street 52) நடந்த இந்த சம்பவம் பற்றி நேற்று ஜனவரி 15ஆம் தேதி பிற்பகல் 2:20 மணியளவில் காவல்துறையினருக்கு புகார் கிடைத்தது.

இதில் பாதிக்கப்பட்ட சிறுமி தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இது தொடர்பாக காவல்துறை விசாரணை நடந்து வருகிறது.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 338(b)இன் கீழ் கவனக்குறைவான செயலின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, S$5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இனி அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் இந்தியா-சிங்கப்பூர் இடையே பயணிக்கலாம்!