சிங்கப்பூரில், மோசடி SMS அல்லது Call தொல்லையா? பாதுகாப்பு செயலி அறிமுகம்!

Singapore ScamShield app
Singapore ScamShield app (PHOTO: Travis Loh)

இந்த ஆண்டின் முதல் பாதியில் சுமார் S$102 மில்லியன் மோசடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய குற்றத் தடுப்பு கவுன்சில் (NCPC) தெரிவித்துள்ளது.

இந்த மோசடிகளில், மின்னணு வணிக மோசடிகள், இணைய காதல் மோசடிகள் மற்றும் SMS அல்லது தொலைபேசி அழைப்புகள் மூலம் மோசடிகள் ஆகியவை அடங்கும்.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணியிடம் சோதனை… 200 கிராம் தங்கம் பறிமுதல்!

ScamShield செயலி

புதிய மொபைல் செயலியான ScamShield சந்தேகத்திற்கிடமான SMS செய்தி மற்றும் மோசடி அழைப்புகளைத் தடுக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த நவ, 20ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலியானது, சிங்கப்பூர் அரசு தொழில்நுட்ப நிறுவனம் (NCPC) மற்றும் சிங்கப்பூர் காவல் படை (SPF) உள்ளிட்டவற்றுடன் இணைந்து செயல்படுகிறது.

Screenshot via ScamShield app

இது தற்போது iOS சாதனங்களில் மட்டுமே கிடைக்க பெறுகிறது. அதே போல, Android தொலைபேசிகளுக்கும் ScamShield செயலி கூடிய விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செயலி எவ்வாறு இயங்கும்?

செயற்கை நுண்ணறி மூலம், SMS செய்தியை ஸ்கேன் செய்து முக்கிய சொற்களை அடையாளம் காண்பதன் மூலம் மோசடி செய்திகள் அடையாளம் காணப்படும்.

இந்த செயலி, அறியப்படாத நபர்கள் அனுப்பிய செய்திகளை மட்டுமே சோதனைக்கு உட்படுத்தும்.

உங்கள் தொடர்பு பட்டியலில் உள்ளவர்களிடம் எந்த தரவையும் அது சோதனை செய்யாது.

Screenshot via ScamShield app

மோசடி செய்திகளாக அடையாளம் காணப்பட்ட SMS செய்திகளை “junk” போல்டெர்க்கு அது மாற்றும்.

இதில் தடுப்புப்பட்டியலில் உள்ள மோசடி அழைப்புகளை பற்றி பொதுமக்கள் புகார் செய்யலாம்.

ScamShield எந்த தனிப்பட்ட தரவையும் கேட்காது.

மேலும், பதிவு செய்ய உங்கள் மொபைல் எண் தேவையில்லை.

தடுப்பூசி மருந்துகள் மலிவு, சமமான முறையில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் – பிரதமர் லீ

சிங்கப்பூரிலிருந்து சென்னை, கோவை, திருச்சி செல்லும் விமானங்கள்!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…