சிங்கப்பூர் இரண்டாவது இடம் – சீனாவின் செல்வாக்கை பயன்படுத்தும் நாடுகளின் வரிசையில் சிங்கப்பூர்

China's President Xi Jinping congratulates PM Lee on election results
China's President Xi Jinping congratulates PM Lee on election results (Photo: Today)

உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவை நேரடியாக எதிர்க்கும் அளவிற்கு திறன் மற்றும் மிகுந்த செல்வாக்கு கொண்ட நாடு சீனா ஆகும். தைவானை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனமான Doublethink Lab சீனா இன்டெக்ஸ் என்ற அறிக்கையை ஏப்ரல் 25 அன்று வெளியிட்டது. இந்த அறிக்கையின் படி சீனாவின் செல்வாக்கை அதிகம் பயன்படுத்தும் உலகின் இரண்டாவது நாடு சிங்கப்பூர் ஆகும்.

தாய்லாந்தை விட இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் சிங்கப்பூர் சற்று முன்னிலையில் இருந்தது.36 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் கம்போடியாவுக்கு பின்னால் தரவரிசையில் சிங்கப்பூர் உள்ளது. மேலும் சீனாவின் செல்வாக்கை வெளிப்படுத்தும் முதல் 10 நாடுகளின் வரிசையில் தென்கிழக்கு ஆசிய நாடுகள், பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா போன்ற நாடுகளும் உள்ளன.

தைவான் 9வது இடத்தையும் ஆஸ்திரேலியா பத்தாவது இடத்தையும் பெற்றுள்ளது.இந்த தரவானது மார்ச் முதல் ஆகஸ்ட் 2021 வரை தென்கிழக்கு ஆசியா, கிழக்கு ஆசியா ,மத்திய ஆசியா, ஐரோப்பா ,ஆப்பிரிக்கா ,தென்அமெரிக்கா மற்றும் வட அமெரிக்கா உள்ளிட்ட 8 பிராந்தியங்களில் கணக்கெடுக்கப்பட்டு சேகரிக்கப்பட்டதாகும்.

சிங்கப்பூர் அரசாங்கம் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களுக்கு ,சீன நிறுவனங்கள் சப்ளையர்களாக இருப்பதாகவும் ,சீனாவை தளமாகக் கொண்ட மூலதனம் சிங்கப்பூரின் பல பகுதிகளில் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.சிங்கப்பூருக்கான அந்நிய முதலீடுகளின் மிகப் பெரிய ஆதாரமாக சீனா இல்லை என்றாலும் சீனாவில் சிங்கப்பூர் மிகப்பெரிய முதலீட்டாளராக உள்ளது என்று அறிக்கை வெளிக்காட்டுகிறது.