COVID-19: சிங்கப்பூரில் ஒரே நாளில் 120 பேருக்கு தொற்று உறுதி..!

Singapore sees record daily spike of 120 COVID-19 cases
Singapore sees record daily spike of 120 COVID-19 cases

சிங்கப்பூரில் புதிதாக 120 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று (ஏப்ரல் 5) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இதுவரை சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 1,309ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : இந்தியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து சிங்கப்பூர் திரும்புவோர் 14 நாள் ஹோட்டலில் தனிமை..!

புதிய சம்பவங்கள்

புதிய சம்பவங்களில், 4 நபர்கள் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் என்று MOH குறிப்பிட்டுள்ளது. மேலும் மற்ற சம்பவங்கள் அனைத்தும் உள்ளூரில் பரவியதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

புதிய சம்பவங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கை, இரண்டு வெளிநாட்டு ஊழியர்கள் தங்குமிடங்களுடன் தொடர்புடையது.

அதாவது S11 Dormitory @ Punggol மற்றும் Westlite Toh Guan ஆகிய வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் முறையே 22 மற்றும் 10 புதிய சம்பவங்கள் தொடர்பு உடையவை.

இரண்டு தங்குமிடங்களில் கிட்டத்தட்ட 20,000 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அடுத்த 14 நாட்களுக்கு அவர்களின் அறைகளில் தங்க வேண்டியிருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குணமடைந்து வீடு திரும்புவதற்கு முன்னர், கண்காணிப்பில் இருப்போரை தங்கவைக்கும் இடமாக சிங்கப்பூர் EXPO-வை மாற்ற, அதிகாரிகள் தயார்படுத்தி வருவதாகச் சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பள்ளிகள், வேலையிடங்கள் மூடல் எதிரொலி; மால்களில் நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள்..!

#coronavirusSingapore #coronavirusnews #coronavirusupdateinSingapore #Tamilnews #coronavirusupdate #coronavirusSingaporecases #coronavirusinSingapore #SingaporeLatestTamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil