COVID-19: சிங்கப்பூரில் ஒரே நாளில் அதிகபட்சமாக 142 பேர் பாதிப்பு..!

Singapore sees record daily spike of 142 new COVID-19 cases
Singapore sees record daily spike of 142 new COVID-19 cases

சிங்கப்பூரில் புதிதாக 142 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று (ஏப்ரல் 8) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இதுவரை சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 1,623ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் போலீஸ் அறிவுரையை கேட்க மறுத்த முதியவர்; தொடர்ந்து சச்சரவில் ஈடுபட்டதால் கைது..!

குணமடைந்தோர்

மேலும், அன்றைய நிலவரப்படி மருத்துவமனையிலிருந்து மேலும் 29 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று MOH தெரிவித்துள்ளது.

தற்போது வரை மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 406ஆக உள்ளது.

மருத்துவமனையில் உள்ளோர்

மருத்துவமனையில் இன்னும் 669 உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

மருத்துவமனையில் உள்ள பெரும்பாலானோரின் உடல்நிலை சீராகவோ அல்லது மேம்பட்டோ வருகிறது.

மேலும், 29 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர் என்றும் MOH குறிப்பிட்டுள்ளது.

புதிய சம்பவங்கள்

புதிய சம்பவங்களில், 2 பேர் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்.

72 புதிய நபர்களுக்கு தொடர்பு கண்டறிதல் நிலுவையில் உள்ளதாக MOH குறிப்பிட்டுள்ளது.

மேலும் 13 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டோருடன் தொடர்பு இருந்ததாகவும் MOH குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரில் COVID-19 தொற்றில் 1604-வது சம்பவத்தில் பதிவான இந்தியர் ஒருவர் சோதனை முடிவுகளுக்காக காத்திருந்தபோது, அந்த முடிவுகளை பெறும் முன்னரே உயிரிழந்ததாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

மேலும் படிங்க : சிங்கப்பூரில் COVID-19 பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருந்த நிலையில் இந்தியர் மரணம்..!