2 ஆம் பரிசை தட்டி சென்றார் சிங்கப்பூரை சேர்ந்த இளம் பாடகர் சூர்யா…

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் போட்டியில் 2 ஆம் பரிசை தட்டி சென்றார் சிங்கப்பூரை சேர்ந்த இளம் பாடகர் சூர்யா.

விஜய் டிவி ‘சூப்பர் சிங்கர் ஜூனியர்’ என்ற இளம் குரலுக்கான தேடல் நிகழ்ச்சியை தொடர்ந்து 5 சீசன் ஆக நடத்தி வருகிறது. சூப்பர் சிங்கர் ஜூனியர் 6 வது சீசனில் இறுதி போட்டியில் சிங்கப்பூரை சேர்ந்த இளம் பாடகர் சூர்யா 2 வது பரிசை வென்றார். இதில் பூவையார், சின்மயி, அனுஷ்யா, அகானா, சூர்யா மற்றும் ஹிருத்திக் ஆகிய 6 போட்டியாளர்கள் இறுதி போட்டியில் பங்கேற்றனர்.

சிறப்பாக நடைபெற்ற இப்போட்டியை விஜய் டிவி நேரடி ஒளிபரப்பு செய்தது. இதில் முதல் பரிசை ஹிருத்திக் தட்டி சென்றார். இரண்டாம் பரிசை சிங்கப்பூரை சேர்ந்த சூர்யா வென்றார்.மூன்றாம் பரிசை பூவையார் தட்டிசென்றார்.

முதல் பரிசு 50 லட்சம் ரூபாய் (S$100,000) மதிப்புள்ள வீடு, இரண்டாம் பரிசு 25 லட்சம் ( S$50,000) மதிப்புள்ள வைர நகைகள் மற்றும் மூன்றாம் பரிசாக 10 லட்சம் ரூபாய் (S$20,000) வழங்கப்பட்டது.