தமிழ் நாளிதழ் வாங்கினால் பிரியாணி இலவசம்… அசத்தும் சிங்கப்பூர் தமிழர் உணவகம்!

(PHOTO: Tenkasi Saral Restaurant -Singapore / FB)

சிங்கப்பூரில் உள்ள தமிழர் உணவகத்தில், தமிழ் நாளிதழை வாங்கினால் சிக்கன் பிரியாணி இலவசமாக வழங்கியுள்ளனர்.

லிட்டில் இந்தியா பகுதியில் அப்பர் வெல்டு சாலையில் அமைந்துள்ள ‘தென்காசி சாரல்’ என்ற உணவகம் இந்த அறிவிப்பை செய்தது.

சிங்கப்பூர் நிறுவனத்தின் துரிதமான PCR கையடக்க சோதனைக் கருவி!

தென்காசியை சேர்ந்த ஷேக், மதுரையை சேர்ந்த பாபா ஹுசைன் ஆகியோர் அந்த உணவகத்தை நடத்தி வருகின்றனர்.

சிங்கப்பூரின் பிரபல தமிழ் நாளிதழை வாங்குவோருக்கு இலவசமாக நாட்டுக் கோழி பிரியாணி வழங்கப்படும் என்று அறிவித்தனர்.

(PHOTO: Tenkasi Saral Restaurant -Singapore / FB)

அந்த சலுகை கடந்த 29ஆம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கி, முதல் 200 பேருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மொழியை வளர்க்கும் விதமாக இந்த அறிவிப்பு இடம் பெற்றுள்ளதாக இணையவாசிகள் பாராட்டி வருகின்றனர்.

இந்த பெருமை அனைத்தும் சிங்கப்பூரில் வசிக்கும் இரு தமிழர்களை சேரும் என்றும் பலர் பாராட்டியும் வருகின்றனர்.

சிங்கப்பூரில் தேக்கா நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்ற தொற்று பாதித்த நபர்கள்!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…