சிங்கப்பூரில் 3 பேருந்துகள் மோதி விபத்து; 11 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

A chain collision involving 3 buses in Tampines
A chain collision involving 3 buses in Tampines (Photo: Facebook/Singapore Bus Drivers Community)

தெம்பனிஸில் மூன்று பேருந்துகள் சம்பந்தப்பட்ட விபத்து ஏற்பட்டது, அதில் 11 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அந்த 11 பேரில் பேருந்து ஓட்டுநர் மற்றும் 21 முதல் 65 வயதுக்குட்பட்ட 10 பயணிகளும் அடங்குவர், அவர்கள் சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தனர் என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க : சிங்கப்பூர் ரசாயன தொழிற்சாலை தீ விபத்தில் இந்திய ஊழியர் உட்பட இருவர் பலி..!

இதில் 19 மற்றும் 37 ஆகிய இரண்டு பேருந்துகளை SBS போக்குவரத்து இயக்கியது என்பதை வியாழக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் “அதிர்ஷ்டவசமாக, எங்கள் பஸ் கேப்டன்களோ அல்லது எங்கள் இரண்டு பேருந்துகளிலிருந்து வந்த பயணிகளோ காயமடையவில்லை” என்று SBS  டிரான்சிட்டின் கார்ப்பரேட் தகவல்தொடர்புகளுக்கான மூத்த துணைத் தலைவர் டம்மி டான் கூறியுள்ளார்.

(Photo: Facebook/Singapore Bus Drivers Community)

மேலும், (Go-Ahead) ஆபரேட்டர் கோ-அஹெட் சிங்கப்பூரும் தனது பேருந்துகளில் ஒன்று விபத்தில் சிக்கியிருப்பதை வியாழக்கிழமை உறுதிப்படுத்தியது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பான்-தீவு அதிவேக நெடுஞ்சாலையில் (PIE) விபத்து..!

வலைத்தளங்களில் பகிரப்பட்ட புகைப்படங்களில், இரண்டு டபுள் டெக்கர் பேருந்துகள் மற்றும் ஒரு ஒற்றை டெக் பேருந்து ஆகியவை நிற்பதை காணலாம். மேலும் ஒரு புகைப்படத்தில் மூன்றாவது பேருந்தின் முகப்பு கண்ணாடி உடைந்திருப்பதையும் காணலாம்.

இது குறித்து போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது.