சிங்கப்பூர் TPG வழங்கும் அளவில்லா டேட்டா சலுகை.!

TPG Telecom offers to 200,000 users free unlimited data when they roam in Malaysia and Indonesia.

சிங்கப்பூர் தொலைதொடர்பு நிறுவனம் TPG சுமார் 2 லட்சம் பயனாளர்களுக்கு மலேசியா மற்றும் இந்தோனேசிய நாடுகளில் ரோமிங் -யின் போது இலவச அளவில்லா டேட்டா -வை வழங்குகிறது.

சிங்கப்பூரின் 4 வது தொலைதொடர்பு சேவையான TPG தன்னுடைய சக போட்டியாளர்களை சமாளிக்கும் விதமாக எண்ணற்ற பல சலுகைகளை வழங்கி வருகிறது. தற்போது 2 லட்சம் பயனாளர்களுக்கு இலவச டேட்டாவை ரோமிங் போது முற்றிலும் இலவசமாக அதுவும் குறிப்பாக கால அளவில்லாமல் வழங்குகிறது.

TPG செயல் நிர்வாக தலைவர் டேவிட் டூஹ் கூறுகையில்; மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய இரண்டு நாடுகளும் சிங்கப்பூரர்கள் அதிகம் பயணிக்கும் நெருங்கிய நாடுகளாக இருந்து வருகிறது. அதன் காரணமாக எங்களுடைய அநேக வாடிக்கையாளர்கள் இனி பழைய அதிகமான ரோமிங் கட்டணங்களில் இருந்து விடுபட்டு தங்களுடைய பணத்தை சேமிக்கலாம், என்று கூறினார்.

இந்த புதிய சலுகையானது ஜூலை மாதம் நடுவில் தொடங்கும், என கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் தொலைபேசி எண் ரோமிங் இல் இருக்கும் போது TPG பயனாளிகள் எல்லையற்ற அழைப்புகளை பெற முடியும். மேலும், அனைத்து இன்கமிங்க் அழைப்புகளும் மற்றும் SMS -களும் முற்றிலும் இலவசம்.

சிங்கப்பூர் fixed-Line எங்களுக்கு மட்டும் அழைப்புகளுக்கான கால வரம்பு 20 நிமிடம் வழங்கப்பட்டுள்ளது.