தெலோக் பிளாங்கா டிரைவ் கடைக்காரர்களுக்கும் கட்டாய கொரோனா பரிசோதனை.!

Singapore Telok Blangah Drive
Pic: FB/Rachel Ong

சிங்கப்பூரில் உள்ள தெலோக் பிளாங்கா (Telok Blangah) சந்தையில், ஒரு கடைக்காரருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதால் தெலோக் பிளாங்கா டிரைவ் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தெலோக் பிளாங்கா டிரைவ் உணவு நிலையம் மற்றும் சந்தையில் உள்ள கடைக்காரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இன்று (17-06-2021) கட்டாய கிருமித்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

ரெட்ஹில் சந்தை மற்றும் உணவு நிலைய கடைக்காரர்களுக்கு கட்டாய கிருமித்தொற்று பரிசோதனை.!

தெலோக் பிளாங்கா ஸ்டிரீட் 31 Black 80D-ல் இன்று காலை 9 மணி முதல் கிருமித்தொற்று பரிசோதனை நடத்தப்படும் என்றும், தெலோக் பிளாங்கா டிரைவில் நேற்று தொடங்கிய துப்புரவு பணிகள் நாளை நிறைவடையும் என்றும் வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரேச்சல் ஓங் (Rachel Ong) முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

உணவு நிலையம் மற்றும் சந்தை கடைக்காரர்கள், தங்களுக்கு கிருமித்தொற்று பரிசோதனை நடத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தனர் எனவும், அதற்கு ஏற்ப சுகாதார அமைச்சகம் பரிசோதனைகளுக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும் ரேச்சல் ஓங் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?