குறிப்பிட்ட இரு பகுதிகளுக்கு சமீபத்தில் சென்றவர்கள் சிங்கப்பூருக்குள் நுழைய தடை..!

COVID-19 சம்பவம் அதிகரித்து வரும் சூழலில் தென் கொரியாவின் Cheongdo மற்றும் Daegu நகரத்திலிருந்து வரும் வருகையாளர்களை சிங்கப்பூர் அனுமதிக்காது என்று சுகாதார அமைச்சகம் (MOH) செவ்வாய்க்கிழமை அன்று (பிப்ரவரி 25) தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை புதன்கிழமை இரவு 11.59 மணிக்கு நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பிலிப்பைன்ஸ் நாட்டவருக்கு COVID-19 வைரஸ் தொற்று – தூதரகம்..!

மேலும், கடந்த 14 நாட்களில் இரு பகுதிகளுக்கும் பயணம் செய்த அனைத்து புதிய குறுகிய கால வருகையாளர்களுக்கும் இது பொருந்தும் என்று அமைச்சகம் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளது.

வைரஸ் தொற்று வேகமாக வளர்ந்து வரும் சூழலில், மேற்கண்ட அந்த இடங்களிலிருந்து பயணிப்பவர்கள் சிங்கப்பூருக்கு அதிக ஆபத்தை விளைவிக்க வாய்ப்புகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 977 உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்களை தென் கொரியா உறுதிசெய்துள்ளது. அவற்றில் பெரும்பாலானவை Daegu நகரில் உள்ள ஒரு மதப்பிரிவுடன் தொடர்புடையவை, மேலும் 100க்கும் மேற்பட்டவை Cheongdo மருத்துவமனையுடன் தொடர்புடையவை என்றும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் விதிமுறைகளை மீறிய தொழிலாளர்கள் உட்பட 19 நபர்களுக்கு தண்டனை..!

இரு பகுதிகளுக்கும் சமீபத்திய பயணம் மேற்கொண்ட சிங்கப்பூரர்களுக்கும் மற்றும் நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்களுக்கும் வீட்டில் தங்க அறிவிப்பு வழங்கப்படும். சிங்கப்பூருக்குத் திரும்பிய பின்னர் 14 நாட்கள் அவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது சிங்கப்பூரர்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் வேலை அனுமதி வைத்திருப்பவர்கள், மாணவர் அனுமதி (student’s passes) மற்றும் நீண்டகால வருகை அனுமதி ஆகியவற்றிற்கு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.