சிங்கப்பூரில் திட்டமிட்டபடி 2020 க்குள் 5G !

Singapore to continue rolling out 5G infrastructure by 2020 as planned

சிங்கப்பூர் ஏற்கனவே திட்டமிட்டபடி 2020ஆம் ஆண்டுக்குள் 5G சேவை வழங்க உள்கட்டமைப்பை தொடர்ந்து செய்து வருகிறது, என்று தொலைத்தொடர்பு மற்றும் தகவல் அமைச்சர் S. ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்த 5G சேவை சம்பந்தமாக ஊழியர்கள் கழக உறுப்பினர் லியோன் பெரேரா என்பவர் ஈஸ்வரன் அவர்களிடம் கேள்வி எழுப்பினார்.

பெரேரா கேள்வி; சிங்கப்பூர் 5 ஜி சேவையை பற்றிய அரசு திட்டம் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி, சீன தொழிற்நுட்பமான Huawei நிறுவனத்தை U.S. தடை செய்த பிறகு எவ்வாறு உள்ளது என்று கேள்வி எழுப்பினார்.

2020ஆம் ஆண்டுக்குள் 5G சேவை வழங்க உள்கட்டமைப்பை தொடர்ந்து செய்து வருவதாக ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்

ஈஸ்வரன் அவர்களுடைய 5 நாள் சீன சுற்றுப்பயணம் கடந்த ஜூலை 6 ஆம் தேதி முடிந்தது.

தொலைதொடர்பு மற்றும் தகவல் அமைச்சராக இதுவே அவருடைய முதல் அதிகாரபூர்வ சுற்றுப்பயணம் ஆகும்.

இந்த சுற்று பயணத்தின் போது ஈஸ்வரன் சீனாவில் தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் Miao Wei மற்றும் சீனாவின் மின்வெளி மேலாண்மை தலைவர் Zhuang Rongwen ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.

மேலும், சீனாவின் டிஜிட்டல் தொழிற்சாலை அழகியல் இயற்கை வளத்தை பார்வையிட்ட ஈஸ்வரன் அவற்றை பற்றி புரிந்து கொள்ள வருகை தந்ததாக கூறினார்