சிங்கப்பூரில் இருந்து தமிழகத்திற்கு சிறப்பு விமானம் மூலம் சுமார் 177 பேர் சென்றனர்..!

Singapore to Tamil Nadu special flight
Singapore to Tamil Nadu special flight (Photo: Air India)

பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக சிக்கிய இந்திய நாட்டவர்கள் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்களில் அழைத்து வரப்படுகின்றனர்.

வந்தே பாரத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் மட்டும் சுமார் 43,000 அதிகமானவர்கள் வெளிநாடுகளில் இருந்து சொந்த பகுதிகளுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் 10,000 சிவப்பு, வெள்ளை கொடிகளுடன் தேசிய தின “ஒற்றுமையின் கொடி” கொண்டாட்டம்..!

இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து 5 குழந்தைகள், 37 பெண்கள் உட்பட சுமார் 177 நபர்கள் சென்னை வந்தடைந்ததாக தமிழக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

அதே போல, உக்ரைனில் இருந்து 56 பெண்கள் உள்பட 150 பேர், இலங்கையில் இருந்து 24 பேர் சிறப்பு விமானங்கள் மூலம் சென்னை வந்தடைந்தனர்.

சென்னை விமான நிலையம் வந்த அனைத்து பயணிகளுக்கும், குடியுரிமை மற்றும் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை முடிந்ததும், பின்னர் அங்கேயே தமிழக பொது சுகாதார துறை சார்பில் கொரோனா பரிசோதனைக்காக சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

அதனை தொடர்ந்து அனைவரும் அரசு பேருந்து உதவியுடன் சென்னையில் உள்ள கல்லூரி மற்றும் ஓட்டல்களில் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதையும் படிங்க : நான்கு மடங்கு வேகத்தில் COVID-19 சோதனை முடிவுகள் – சிங்கப்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg