சிங்கப்பூரில் இருந்து திருச்சி… கழிவறையில் பொட்டலம் – 2 தங்க கட்டிகள்: போலீசார் விசாரணை

Couple cheating arrest TamilNadu

சிங்கப்பூரில் இருந்து கடந்த நவ.20 அன்று காலை 8.20 மணியளவில் இண்டிகோ விமானம் திருச்சி விமான நிலையம் வந்தது.

இந்த விமானத்தில் பயணித்து வந்த அனைவரும் வெளியேறிய பின்னர், விமானத்தை பணியாளர்கள் சுத்தம் செய்தனர்.

மெல்லும் புகையிலை, சிகரெட் பறிமுதல் – வெளிநாட்டவர் மீது குற்றச்சாட்டு

அப்போது விமான கழிவறையில் பொட்டலம் ஒன்று கிடக்க, உடனடியாக பணியாளர் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, அதனை அதிகாரிகள் கைப்பற்றி பிரித்தனர். அந்த பொட்டலத்தில் சுமார் ரூ.10 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான 2 தங்க கட்டிகள் இருந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த பொட்டலத்தை சுங்க அதிகாரிகளுக்கு பயந்து பயணி யாரேனும் விட்டு சென்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இது குறித்து விசாரணை தொடர்ந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

குற்றவாளிகளை தப்பிக்க வைக்க S$32,500 லஞ்சம்… சிக்கிய போலீஸ் அதிகாரி