அடேங்கப்பா! சிங்கப்பூரில் சுற்றுலாப் பயணிகளை கவரும் புதிய இடங்கள் – பார்வையாளர்களை திருப்திப்படுத்தும் சிங்கப்பூர் அரசாங்கம்

singapore tourism board avatar skate surf chocolate factory

சிங்கப்பூரில் Covid-19 வழக்குகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் அதன் எல்லைகள் முழுமையாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வைரஸ் தொற்று அச்சுறுத்தலால் நாடுகளுக்கிடையே எல்லைகள் மூடப்பட்டதால் சுற்றுலாத்தலங்கள் வருவாயை இழந்தன.தற்பொழுது covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு சிங்கப்பூர் தனது எல்லையை முழுமையாக மீண்டும் திறந்துள்ளது.

எல்லையை திறந்து அடுத்த கட்ட நடவடிக்கையாக, இரண்டு ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளின் வருகை இன்றி கலையிழந்து இருக்கும் சிங்கப்பூரில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு மீண்டும் பார்வையாளர்களை ஈர்க்கும் விதமாக புதிய விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் அற்புதமான இடங்களின் பட்டியல் அடங்கிய அட்டவணையை சிங்கப்பூர் தயார் செய்து வருகிறது.

சர்வதேச பயணிகளுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் சலுகைகளை புதுப்பித்துள்ளது. சிங்கப்பூரில் சர்வதேச பார்வையாளர்களை அதிகரிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுமார் 120000 பார்வையாளர்கள் கடந்த மாதம் சிங்கப்பூரை நோக்கி பயணித்துள்ளனர்.இது ஜனவரி மாதத்தை விட இரண்டு மடங்கு அதிகம் என்று சுற்றுலா வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரை நோக்கி படையெடுக்கும் பார்வையாளர்களை கவரும் விதமாக புதிய இடங்கள், மற்றும் வித்தியாசமான நிகழ்வுகள் ஆகியவற்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சாக்லேட் ஃபேக்டரி, ஐஸ்கிரீம் அருங்காட்சியகம், பனிச்சறுக்கு மற்றும் அவதார் கருப்பொருள் அடங்கிய அமைப்பு போன்றவற்றை பார்வையாளர்கள் கண்டு மகிழலாம்.

எது எப்படியோ! சிங்கப்பூரை நோக்கி வரும் சுற்றுலா பயணிகளுக்கு தரமான மற்றும் மிகச் சிறந்த அனுபவத்தை வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது என்பது இதிலிருந்து புலப்படுகிறது