சிங்கப்பூர் அமைச்சருக்கு விருந்தளித்த தமிழக நிதியமைச்சர்!

Photo: Tamilnadu Finance Minister Official Twitter Page

அரசுமுறைப் பயணமாக இந்திய வந்துள்ள சிங்கப்பூர் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து, தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது, அவருக்கு சால்வை அணிவித்த அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், ‘JOURNEY A CIVILIZATION’ என்ற புத்தகத்தை வழங்கினார்.

சிங்கப்பூரில் 5வது மாடியில் இருந்து கீழே குதித்த பெண்… மருத்துவமனையில் அனுமதி

பின்னர், சிங்கப்பூர் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரனுக்கு தமிழக அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இரவு உணவு விருந்தளித்தார். இதில், சிங்கப்பூர் பிரதிநிதிகள் மற்றும் தமிழக நிதித்துறையின் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

சிங்கப்பூரில் தனியார் பேருந்து ஓட்டுநர்களாக 21 முதல் 25 வயதுடைய இளைஞர்கள்!

அதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் அமைச்சருடன் தமிழக அமைச்சர், சிங்கப்பூர் மற்றும் தமிழகம் இடையேயான முதலீடு, திறன் மேம்பாடு உள்ளிட்டவைக் குறித்து ஆலோசனை நடத்தினர்.