சுற்றுலா மற்றும் தனிப்பட்ட பயணம் எப்போது தொடங்கும் ?

Singapore Flights

இந்த 2021 ஆண்டில் பிற்பகுதியில் தனிப்பட்ட மற்றும் பொழுதுபோக்கு சுற்றுலாப் பயணங்கள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடக்கம் தங்களின் சர்வதேச பயணங்களுக்குக் காத்திருப்பவர்களுக்கும், குடும்பம் மற்றும் நண்பர்களுடன் மீண்டும் இணைவதற்கு ஆர்வமுடையவர்களுக்கும் ஒரு அறிய வாய்ப்பாக அமையும் என்று சர்வதேச விமானப் போக்குவரத்துச் சங்கத்தின் தலைவர் திரு அலெக்சாண்டர் டிஜூனியக் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் மரமேடை மிதப்பில் இருந்து தண்ணீருக்குள் பாயும் பெரிய முதலை – வைரல் காணொளி!

மேலும், கொவிட்-19 காலத்துக்கு முந்தைய காலத்தை ஒப்பிடும்போது இவ்வாண்டின் இறுதி நிலவரக் கணக்குப்படி பயணங்களின் விகிதம் குறைவாகவே இருக்கும் என்றும் வணிகப் பயணங்களின் மீட்சி மெதுவடையும் என்றும் சர்வதேச விமானப் போக்குவரத்துச் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

“2021ம் ஆண்டின் மே அல்லது ஜூன் மாதங்களுக்குப்பிறகு விமானப் போக்குவரத்து விகிதங்களில் மாற்றங்கள் தென்பட வாய்ப்புள்ளது.”

பயண நடைமுறைகள் வடிவமைப்பு மற்றும் எல்லைகள் மீண்டும் திறந்துவிடும் திட்டம் பற்றியும், சுமார் 33 நாடுகளுடன் சர்வதேச விமானப் போக்குவத்துச் சங்கம் பணியாற்ற தொடங்கிவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

சர்வதேச விமானப் போக்குவரத்துச் சங்கத்தின் பயண அனுமதி, பயணியின் தடுப்பூசி தகவல்கள் மற்றும் கொவிட்-19 சோதனை முடிவுகள் போன்றவற்றை மின்னியல் முறையில் சோதிக்கும் நடமாடும் சுகாதார சரிபார்ப்புச் செயலி போன்றவை அந்த நடைமுறைகளில் அடங்கும்.

மினிபஸ், மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – சம்பவ இடத்தில் ஒருவர் மரணம்!