COVID-19 தடுப்பு மருந்து உலகளவில் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்வது முக்கியம் – சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா இணக்கம்..!

Singapore, US agree on importance of COVID-19 vaccines being made available globally: MFA
(PHOTO: REUTERS/Dado Ruvic/Illustration)

COVID-19 தடுப்பு மருந்து உலகளவில் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை, சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ (Mike Pompeo) ஆகியோரின் இருநாடுகளும் இணக்கம் கண்டுள்ளன.

டாக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் திரு பாம்பியோ இருவரும் தொலைபேசி வாயிலாக, COVID-19 தடுப்பு மருந்துகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஒத்துழைப்பு பற்றி உரையாடியதாக சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சகம் (MFA) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் 127 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் கிருமித்தொற்று இல்லை..!

சிங்கப்பூரில், அமெரிக்காவின் வலுவான வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அவர்கள் உரையாடினர் என்று MFA செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

உள்கட்டமைப்பு மற்றும் வர்த்தகத்தில் இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் அமெரிக்காவின் பொருளாதார ஈடுபாட்டை பலப்படுத்தும் சுங்க வசதி நடைமுறை எளிமை பற்றி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உரையாடலின் போது, ​​டாக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் திரு பாம்பியோ ஆகியோர் தங்கள் நாடுகளுக்கிடையேயான சிறந்த மற்றும் நீண்டகால உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தினர்.

மேலும், பொருளாதாரம், தற்காப்பு மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் வலுவான ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்தினர் என்று MFA தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : வேலை அனுமதி உடைய பயணிகள் உட்பட… மின்னணு கண்காணிப்பு சாதனத்தை அணிய வேண்டும்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg