விமான பயணங்களை தொடங்க முயற்சி… இந்த நாட்டுடன் சிங்கப்பூர் ஒத்துழைப்பு

(PHOTO: Dhany Osman/Yahoo News Singapore)

கொவிட்-19 சூழலில் உலகளாவிய விமானப் பயணங்களை அதிகரிப்பது போன்ற பல துறைகளில் சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவும் இணைந்து செயல்படும் என்று தெரிவித்துள்ளது.

இரு தரப்பு அமைப்புகள் மற்றும் அதிகாரிகள் பல ஆண்டுகளாக வலுப்படுத்தி வந்த ஒத்துழைப்புக்களை மேலும் இரு நாடுகளும் வலுப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் 32 பேருக்கு தொற்று உறுதி – உள்நாட்டில் ஒரு புதிய பாதிப்பு

சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவிற்கும் இடையே சுமார் 12 மணிநேரம் வித்தியாசங்கள் இருந்தாலும் அமெரிக்கா போக்குவரத்து அமைச்சருடன் பயனுள்ள முறையில் தான் பேசியதாக சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் ஓங் யீ காங் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பான முறையில் உலகளாவிய விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டிய தேவை சம்பந்தமான பருவநிலை மாற்றங்கள் மற்றும் இயற்க்கை வளங்களை கட்டிக்காப்பது ஆகியவை பற்றியும் திரு ஓங் குறிப்பிட்டுள்ளார்.

போக்குவரத்தைப் பொறுத்தவரையில் பருவநிலைக்குப் பாதிப்பு ஏற்படுத்ததா வகையில் மாற்று எரிபொருள் பயன்படுத்துவது, புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல் ஆகிய வெவ்வேறு துறைகளில் இரு நாடுகளும் கவனம் செலுத்த இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

விமானப் போக்குவரத்துத் துறை மற்றும் கடல் போக்குவரத்துத் துறை ஆகிய இரண்டும் ஆற்றலுடனும், நம்பகத்தன்மையுடனும், பாதுகாப்புடனும் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் கடல் துறை நிறுவனங்கள் ஆகிய இரண்டிலும் இரு நாடுகளும் ஒத்துழைப்பை பலப்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பாரிஸ் உடன்பாட்டில் சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவும் அங்கம் வகிக்கும் நாடுகள் என்பதை இந்த கூட்டறிக்கை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என கூறப்பட்டுள்ளது.

மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்து… S$1 மில்லியன் அபராதம் விதிக்க கோரிக்கை!